Saturday, September 6, 2008


Continuity of tradition: Megalithic pots with arrow-work graffiti found at Sembiankandiyur village in Nagapattinam district.
வரும்௨0.9.2008 இருபதாம் தேதி செப்டம்பர் சனிக்கிழமை 5 மணிக்கு வங்கி ஊழியர் சங்க கட்டிட்டத்தில்தொல்லியல் துறை அரிஞர் பூங்குன்றன் தமிழக வரலாறு குறித்து ஒளிப்படத்தோடு கூடிய உரை நிகழத்துகிறார்
வாருங்கள்

வங்கிஊழியர் சங்க கட்டிட்டம்
அங்கண்ணன் புலவு உணவகம்எதிரில்
வெரைட்டிஹால் ரோடு
கோவை
தொடர்ர்புக்கு ஜான்
9345944439

Thursday, September 4, 2008

பழங்குடிகள் அன்றும் இன்றும்-வி.பி.குணசேகரன்

வனங்களில்இயற்கையின்குழந்தைகளானபழங்குடிகள்தங்களின்சகோதரர்களாக, முன்னோர்களாக, தெய்;வங்களாக, மண்ணையும்,மரங்களையும், நீரையும், விலங்குகளையும் வழிபட்டனர்.

பழங்குடிகளின் வாழ்க்கைத் தேவைகளை வனங்களே நிறைவு செய்தன. அவர்களின் தேவைகளும் மிகக் குறைவு. எளிய வாழ்க்கை முறை, இயற்கையை சிதைக்காமல், இணைந்து வாழ்ந்தனர். சிதைப்பது குற்றம் எனக் கருதினர்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்புவனத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, காய்களை, கனிகளை, கிழங்குகளை உணவாகக் கொண்டனர். தேவைக்கு சிறு விலங்குகளை வேட்டையாடினர். வேட்டையின் போது சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாடமாட்டார்கள். இனப்பெருக்க காலத்தில் வேட்டைக்கு செல்வதை தவிர்த்தார்கள். வேட்டையை அந்த கிராமமே பகிர்ந்து கொள்வர். இது அவர்களின் சிறந்த பண்புக்கு எடுத்துக்காட்டு.

தங்களது உணவுத் தேவைக்கு அளவான இடத்தில் விவசாயம் செய்தனர். கலப்புப் பயிர் விவசாயம் செய்தனர்@ மண்ணின் வளத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து விவசாயம் செய்தனர். 10, 15 குடும்பங்களைக் கொண்ட ஒரு இனக்குழு ஒரு கிராமமாக இருந்தது. விவசாயத்திற்காக கிராமமே இடம் பெயர்வது, எளிமையானது. சிறிய வீடுகள், அதே சமயம் தட்பவெப்பநிலைக்கு ஏற்புடையது. தங்களுக்கென தனி மொழி, நீதி, நிர்வாகம், உறவு, எல்லைகளைக் கொண்ட வாழ்க்கை முறை. வனம், நிலம், தனி நபர்களின் உடைமையாக இல்லாமல் வளங்கள் அனைத்தும் சமூக உடமையாகக் கொண்டு வாழ்ந்தனர்.

ஆங்கிலேயர்களின் காலத்தில்வனங்களிலுள்ள கனிமங்களை எடுக்க மரங்களை வெட்டினர் ஆங்கிலேயர். வனங்களைச் சிதைத்துக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வனத்தைக் காக்கும் போராட்டத்தை பழங்குடிகள் நடத்தினர். பழங்குடிகளை ஒடுக்கி, வனத்தின் வளத்தை வசப்படுத்த, பழங்குடிகளின் பாரம்பரிய உரிமையை பறிக்கிற வனக் கொள்ளைகளை, சட்டங்களை ஆங்கிலேய அரசு, 1882லிருந்து கொண்டு வந்தது.

பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்று அரசு எல்லை நிர்ணயித்து, அந்த பகுதிக்குள் பழங்குடிமக்கள் செல்லவே தடை போட்;டது. வேட்டையாட, விவசாயம் செய்ய, கால்நடைகள் மேய்க்க, சிறு வனப்பொருட்களை பயன்படுத்த உரிமை மறுக்கப்பட்டது. மீறினால் அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

வனப் பாதுகாப்பிற்கென வனத்துறை அதிகாரிகள் தங்க, ஆங்கிலேய அதிகாரிகள் ஒய்வெடுக்க வசதியான இல்லங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களுக்குப் பொழுதுபோக்கு.

கிராமக்காடுகள் என ஒதுக்கப்பட்ட நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கென தனித்தனியாக சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையற்ற பழங்குடிகளின் உயர்ந்த பண்புகள் வசதி படைத்த பழங்குடி அல்லாதவர்களுக்கு வசதியானது. அதிகாரிகளின் துணையோடு பழங்குடி அல்லாதார் மலை நிலங்களுக்குப் பட்டா பெற்றனர்.

காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் பயிரிட பல்லாயிரம் ஏக்கர் மலை நிலங்கள் ஆங்கிலேயருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற பணம் படைத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டது. நிலத்தை இழந்த பழங்குடிகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாயினர்.

ரயில் பாதை போட, கப்பல் கட்ட, இங்கிலாந்தில் வீடு கட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டிஎடுத்துச் சென்றனர் சமவெளியினர். மின்சாரம், பாசனம் பெற ஆங்கிலேயர்கள் மலை ஆறுகளின் குறுக்கே பாபநாசம், முல்லை பெரியாறு அணை கட்டினர். அதனால் அங்கிருந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.

நிலம், வன உரிமை பறிக்கப்பட்ட பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஆங்கிலேய அரசு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகுஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டங்களை சுதந்திர இந்தியாவில் மேலும் கடுமையாக்கி வனப்பாதுகாப்பு, வன விலங்;கு பாதுகாப்பு சட்டங்களை தமிழக அரசும், இந்திய அரசும் கொண்டு வந்தன.

வேட்டையாடும் உரிமை முற்றாக பறிக்கப்பட்டு வன வெளியேற்றம் தொடர்ந்தது. வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றி;ற்கு எல்லை வகுக்கப்பட்டு அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். காகித ஆலைகளுக்கு வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. ஆலைகளின் தேவைகளுக்காக மரங்கள் வளர்க்க வனப்பகுதி ஒதுக்கப்பட்டது.

கனிமங்கள், கருப்புக்கல் போன்றவை எடுக்கவும் மரங்கள் வெட்டவும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தன மரக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு பல கோடி மதிப்பு மிக்க சந்தன மரங்கள் வனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

வனத்தில் விளைகின்ற நெல்லி, கடுக்காய், 10ச்சுக்காய், சீமார் புல் போன்ற சிறு வனப்பொருட்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. வன வளம் அரசிற்கு வருவாய் ஈட்டித் தரும் பகுதியாகவே மாற்றப்பட்டது.

பாசன அணை, மின்சார அணை, தேயிலைகாப்பி தோட்டங்கள், நிலக்கரி, எண்ணை, இரும்பு, கருங்கற்கள், தைல, ரப்பர் மரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், ஆலைகள், அரசு-தனியார் ஓய்வில்லங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அரசு மற்றும் தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொன்று தொட்டு வனங்களில் வாழ்ந்த பழங்குடிகளை வெளியேற்றியது அரசு. ஆனால் அவர்களுக்கு வழங்கிய மாற்று இடமோ பொட்டல் காடுகளாக இருந்தன. பழங்குடிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தண்ணீரிலிருந்து மீனைப் பிடித்து தரையில் போட்டதைப் போல் அவர்களது வாழ்க்கைச் சூழல் முற்றாக சிதைந்தது. பல்லாயிரம் வருடங்கள் சேமிக்கப்பட்ட அவர்களது அறிவுத் தொகுப்பு, கலாச்சாரம், மனித குலத்துக்கு பயனின்றி போனது. வனம் அழிவிற்கு உள்ளானது.

வனமும், நிலமும், கால்நடைகளையும் இழந்து பரதேசிகளாகப் பழங்குடிகள் மாற்றப்பட்டனர். வனம் அன்னியமானது. வனத்துறையின் ஆதிக்கத்தின் தயவில்தான் வாழும்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

வீடு கட்ட மூங்கில் வெட்டினாலும், கலப்பைக்கு மரம் வெட்டினாலும், சமையலுக்கு காய்ந்த சுள்ளிகள் பொறுக்கினாலும் வனத்துறைக்கு கப்பம் கட்ட வேண்டும். கால்நடைகள் மேய்க்க வரி கட்ட வேண்டும். வனத்துறையின் எடுபிடிகளாக, பண்ணை அடிமை போல் பயந்து வாழும் நிலையே இன்று நிலவுகிறது.

கடுமையான சட்டங்கள், ஆயுதங்கள், தொலைநோக்கிகள், வாகனங்கள், கம்பியில்லா பேசி, அலுவலகங்கள், வனவர் முதல் தலைமை வனப் பாதுகாவலர் வரை பல்லாயிரம் பேர் பல கோடி மாத ஊதியம், இன்னபிற ஏற்பாடுகள் இருந்தும் வனத்தின் பரப்பு சுதந்திரத்தின் போது இருந்ததை விட மூன்று மடங்கு குறைந்து தமிழக மொத்தப்பரப்பில் 10மூத்திற்கும் கீழ் சென்றுவிட்டதற்கு என்ன காரணம்? தண்ணீர் உற்பத்தி செய்கின்ற மிகப் பெரிய தொழிற்சாலையான வனம், புயல் மழையை நம்பியே தண்ணீரைத் தருகிறது.

வனத்துறையின் தயவோடு, வெளிச்சத்திற்கு வராத வீரப்பன்கள் மரக்கடத்தலையும், வன விலங்கு வேட்டையையும் தொடர்கிறார்கள்.

அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் நடமாட்டம் ஈரோடு, தருமபுரி காடுகளோடு நின்றது. சேலம்-ஏற்காடு, கல்வராயன் மலை, நாமக்கல்-கொல்லிமலை, விழுப்புரம்-சேர்வராயன் மலை, வேலு}ர்-ஜவ்வாது, ஏலகிரி மலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கோவை, நீலகிரி, பழனி, கொடைக்கானல், குமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணாமல் போன சந்தனம், தேக்கு, ஈட்டி மரங்களைக் கடத்தியவர்கள் யார்? பழங்குடிகளா? இதற்கு விடை கண்டால் மட்டுமே வனத்தைக் காக்க முடியும்.

எந்த இடத்தில் என்ன மரம் வளரும், எந்தப் பருவத்தில் விதைகள் முளைக்கும், விலங்குகளின் கணம், மரத்திருடர்களின் நடமாட்டம் பற்றி முழுமையாக அறிந்த பழங்குடிகளை புறக்கணித்து, அவர்களை வனத்திலிருந்து அன்னியாமாக்கியதே வனப்பரப்பு குறையக் காரணமாகியது. பழங்குடிகளை ஈடுபடுத்தா வன வளர்ப்புத் திட்டங்கள் வெற்றி பெறா.

வனம் காக்க பழங்குடிகள் காக்கப்பட வேண்டும்பழங்குடிகளுக்கான எளிய பாடத்திட்டம், வனம் சார்ந்த கல்;வி, ஆரம்ப பள்ளி வரை அவரவர் தாய்மொழியில் கல்வி, விடுதியில் அவர்களது உணவு, குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பள்ளி நேரம், விடுமுறை, நடுநிலைப் பள்ளி வரை தனித்த பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.

நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்க வேண்டும். மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் போல் தமிழகத்திலும் நிலங்கள் கை மாறுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். வனத்தின் மீதான உரிமை, வனம் தங்களது என்ற உணர்வு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். வன வளர்ச்சி, பாதுகாப்புப் பணியில் பழங்குடிகளை நியமனம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ராகி, கம்பு, பருப்பு, துணி வழங்க வேண்டும். சரிவிகித உணவு இன்றி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை, பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படி இவர்களை காக்கத் தவறினால் வனம் அழியும். து} காற்றுக்கும், மழைக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு மேலும், மேலும் அதிகரிக்கும்.

பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களை ஆராய, காத்திட, பழங்குடிப் பல்கலைக்கழகம் அவசியம்.

உலகமயச் சூழலில் மலை நிலங்கள் வீட்டுமனைகளாக, சுற்றுலா தலங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை சுற்றுலாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குடிக்கும் பணப்பயிர் விவசாயம், ஆழ்குழாய் கிணறுகள், புதிய வேளாண்முறைகள் போன்றவை, ஓடைகளை வற்ற வைத்துவிட்டன. வன விலங்குகள் கோடையில் தண்ணீருக்கு அலைகின்றன.

பழங்குடிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை சிதைந்து நுகர்வு கலாச்சாரத்தால் சாலையோரம் நின்று வாகனங்களில் வருவோரை பிச்சை கேட்கும் குரங்குகள் போல் மாற்றப்படும் பழங்குடிகளைப் பாதுகாப்பு மிக மிக அவசியம்.

இவர்களுக்கென அமைப்பு, இவர்களுக்கான அமைப்பு அவசியம்.

Tuesday, September 2, 2008

Keetru Ungal Noolagam Article

இந்தியாவின் வரலாறு - தமிழக வரலாறு
(பேரா.சிவத்தம்பியின் ஆய்வுப் பயணம் )
- வீ.அரசு

பேராசிரியர் கா. சிவத்தம்பி பவளவிழா கொண்டாட்டம் என்பது அவர் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பிற்கு நன்றி பாராட்டும் விழா. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்குஎன்பதைப் போல அவருக்கு நன்றி பாராட்டுவதாக நாம் சொல்லிக்கொண்டாலும் நமது மொழி, இலக்கியம், சமூகம் தொடர்பான நமக்குள் நாம் பேசிக்கொள்ளும் விழாவாகவும் இதனை நாம் கட்டமைத்துக்கொள்கிறோம். கடல் கடந்து, திணை கடந்து, புதுத்திணையில் வாழும்போது இப்படியான விழாக்களின் முக்கியத்துவம் கூடிவிடுவதாகவே கருதவேண்டும்.

பேரா. சிவத்தம்பி கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பை, நாம் புரிந்துகொள்ளப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, கட்டமைப்பு தொடர்பான அவரது பங்களிப்புகள்தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், பாசுரங்கள், சாத்திரங்கள் வழி சமயங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைமைகள்.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தை விளக்கிக்கொள்வதற்கு அவர் புலப்படுத்திய நெறிமுறைகள்.

கடந்த மூவாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கு நெறிகளை, அச்சமூகத்தின் ஊடாக வெளிப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேராசிரியர் செயல்பட்ட போக்கைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட பாகுபாடு. இதில் முதல் நிலையில் கூறப்பட்ட பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த பேராசிரியரின் ஆய்வுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்வதற்கு இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வேறு இருநிலைப்பட்ட போக்குகள் தொடர்பாக வேறு சந்தர்ப்பங்களில் பேசிக்கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய பேச்சு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான புதிய சூழலை அடிப்படையாகக் கொண்டு நிகழத் தொடங்கியது. காலனியம், இந்தியா, இலங்கை போன்ற நிலப்பகுதிகளைநாடாகக் கட்டமைத்தபோது, அந்நிலப்பகுதிகளில் வாழ்ந்த/வாழும் மக்கள் கூட்டத்தின் மொழி தொடர்பான உரையாடல்கள் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளில் 14 ஆம் நூற்றாண்டு முதல் உருவான, தொழிற்புரட்சி அது சார்ந்த சமூக மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், உலகப் போர்கள் ஆகிய அனைத்தும் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தினையே அவர்களது அடையாளங்கள் அல்லது இருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அவர்களது மொழி தொடர்பான உரையாடல்களுக்குச் சென்றனர்.

இதனைப் புரிந்துகொள்ளுவதற்கு, உலகத்தின் / சூரியன் மறையாத பிரதேசமாகக் கட்டமைக்கப்பட்ட விக்டோரியா மகாராணியாரின் இலண்டன் மாநகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான பல்வேறு ஆய்வு அமைப்புகளே சாட்சியங்களாக அமைகின்றன. (Aboriginess Protecton Society-1987, The Ethnological Society of London-1843, The Anthropological Society London-1863, The Royal Anthropological Institute-1871) இவ்வகையான அமைப்புகள், உருவாக்கத்தின் மூலம் உலகத்தின் பழம் நாகரிகங்கள் மற்றும் மொழிகள் கண்டறியப்படுகின்றன. அவை குறித்துப் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் கட்டப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் மூலம் கட்டமைக்கப்படும் சமூக வரலாறு தொடர்பானஅரசியல்பல் பரிமாணங்கள் கொண்டவை.

இந்தப் பின்புலத்தில், ஆசிய நாடுகளில்/இந்தியா/ இலங்கை நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் மொழி பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வுரையாடலில் ஒற்றைப் பரிமாணமாக இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் கட்டமைக்கப்படுகின்றது. அதில் பெரும்பங்கை மாக்ஸ்முல்லர் வகிக்கிறார். ஆசிய நாடுகளுக்கு ஒருமுறைகூட பயணம் செய்யாது லண்டனின் இருந்து செயல்பட்ட அவர், இந்தியா/இலங்கை நிலப்பகுதிகளைப் புனித தேயமாகக் கட்டமைத்து, அப்பகுதிகளில் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் சார்ந்த மொழியே இருப்பதாகக் கட்டமைக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல்மொழிப் பேராசிரியராக அவர் நியமிக்கப்படுகிறார். 1868இல், ஒப்புமொழி நூல் (Comparative Philogy) பேராசிரியர் பதவி வழங்கப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்திய/இலங்கை நிலப் பகுதிகளில் இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சாராத திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்கிறது. இந்தோ ஆரிய மொழியான சமசுகிருதம் மட்டும் இந்திய/நிலப்பகுதியின் மொழி என்பது எல்லீஸ் மற்றும் கால்டுவெல் ஆய்வுகளாலும் பின்னர் எமனோவின் ஆய்வுகளாலும் மறுதலிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் நமது பழம் பிரதிகள் அச்சுக்கு வரும்போது, மூன்றாம் முறையாகப் பழம் தமிழ்ப் பிரதிகள் அறியப்படுகின்றன. இந்நிகழ்வால், தமிழ்ச் சமூகம் குறித்த வரலாறு எழுதுநெறிகள் புதிய பரிமாணத்தில் செயல்படத் தொடங்கின. பிரதிகள் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றித் தொல்பொருள் ஆய்வுகளும் உடன் நிகழ்கின்றன. 1784இல் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை பிரித்தானியர்களால் உருவாக்கப்படுகின்றது. 1863 இராபர் புரூஸ் புட் என்பவர்சென்னைக் கோடரிஎன்று அழைக்கப்படும் மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளைச் செங்கற்பட்டு அருகில் கண்டெடுக்கிறார்.

1838இல் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் கல்கத்தா அருங்காட்சியத்தில் உள்ள அசோகன் காசுகளில் ஒரு பக்கம் இலத்தீன் மொழி எழுத்துக்களும் இன்னொரு புறம் வேறு மொழி எழுத்துக்களும் இருப்பதைக் கண்டறிந்து, இலத்தீன் மொழியை வாசிப்பதின் மூலம் இன்னொரு பக்கம் இருந்த பிராமி எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இந்திய நிலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவமுறை ஒன்று கண்டறியப்பட்டது. இதனைக் காசுவியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் கன்னிகாம், 1902ஆம் ஆண்டில் காசுகளில் இவ்வகையான எழுத்து வடிவங்களைக் கண்டறிந்தார். இவ்வடிவங்கள் பற்றிய ஆய்வானது தமிழ்ச்சூழலில் 1930களில் தி. நா. சுப்பிரமணிய அய்யரால் மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 1890 இல் உல்ஸ் (Woltze) மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தருணத்தில்தான் சங்க இலக்கியப் பிரதிகள் அச்சு வாகனம் ஏறின. 1851-1940 என்ற கால இடைவெளியில் பல பரிமாணங்கள் சார்ந்து தமிழின் பழம் பிரதிகள் பதிவு செய்யப்பட்டன. அப்பிரதிகளையும் காசுகளையும் (1901இல் நிகழ்த்தப்பட்ட ஆதிச்ச நல்லூர் மற்றும் 1942இல் அரிக்கமேடு ஆய்வுகள் மற்றும் 1924 சிந்து சமவெளி அகழ்வாய்வுகள்) அடிப்படையாகக் கொண்டும் புதிதாகக் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் கொண்டும் வரலாறு எழுதுநெறி புதிய முறையில் உருப்பெற்றது. இவ்விதம் உருவான வரலாறு எழுது நெறியில், ஈராஸ் பாதிரியார் தி.பி. சீனிவாச அய்யங்கார், வி. சி. இராமசந்திர தீட்சதர் ஆகிய பிறர் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை நிகழ்த்தினர். இவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், கா. சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய பிறர் பிற்காலங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதத் தொடங்கினார். இன்னொரு புறம் கனகசபைப் பிள்ளை ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்என்ற ஆய்வு நூலைக் கொண்டுவந்தார். பின்னர் சிவராஜப்பிள்ளை ‘The Chronology of Early Tamils’ என்ற ஆய்வு நூலை எழுதினார்.

இவ்வாய்வு மரபுகளைப் பற்றிய விமரிசனம் என்பது இவை இலக்கியப் பிரதிகள் சார்ந்தவை, அகச் சான்றுகள் இல்லாதவை என்று பல நிலையில் பேசப்பட்டன. ஆனால் 1940களில் இரண்டாம் உலகப்போர் சார்ந்து உருவான மானிடவியல் ஆய்வுகளும் அது சார்ந்த மொழியியல் ஆய்வுகளும் உலகம் முழுவதும் மொழி ஒப்பாய்வு எனும் ஆய்வுத் தளத்திலிருந்து மொழியை மொழியியல் என்னும் மொழி சார்ந்த தர்க்கப்பூர்வமான ஆய்வுக்கு எடுத்துச் சென்றது. இச்சூழல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல விளைவுகள் உருப்பெற வாய்ப்பாக அமைந்தது. பேராசிரியர் எமனோ, பர்ரோ, கமில்சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர்கள் சங்க இலக்கியப் பிரதிகள், தமிழகத் தொல் பழங்குடிகள், தமிழ்மொழி ஆகியவை தொடர்பானவரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வுப் புலங்களுக்கு வழிகண்டனர். (இவர்களால் உருவாக்கப்பட்ட IATR அமைப்பு Tamil Culture என்ற இதழும் அதில் முக்கியமான பங்களிப்பை செய்ய தொடங்கியது)

தமிழகத்தில் பேரா.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ ஆகிய பிறர் மொழி இலக்கிய ஆய்வுகள், இத்தருணத்தில் சங்க இலக்கியப் பிரதிகளை வேறு கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியது. பேரா. தனிநாயகம் அடிகள் அணுகுமுறை மற்றும் அவரது மாணவரான சிங்காரவேலு அவர்களின் மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் குறித்த அணுகுமுறை ஆகியவை, தமிழ்ச் சமூக வரலாற்றை, சங்க இலக்கியப் பிரதிகளைக்கொண்டு வேறு பரிமாணத்தில் கட்டமைக்க வழிகண்டது.

மேல் விவரித்தப் பின்புலத்திலிருந்து முற்றிலும் புதிதான பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்து வரலாற்று ஆய்வை பேராசிரியர் கா. சிவத்தம்பி 1960-களில் தமது கலாநிதி பட்டத்தின் மூலம் மேற்கொண்டார். இவ்வாய்வு இதற்கு முன் தமிழ்ச் சமூகம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அடியொற்றியதாக அமையாது நவீன வரலாற்று வரைவியல் சார்ந்து அமைந்ததாகக் கருத முடிகிறது. அதனைப் பின்வருமாறு விவாதிக்க முடியும். அரச பரம்பரைகளின் அரசியல் தொடர்பான தகவல் எழுதுதல் எனும் வரலாறு எழுதுநெறி என்பதற்கு மாற்றாக, புவியியல் (Geopolitics) சார்ந்த அரசியல் வரலாறு எழுது முறையை அவர் நமக்குத் தருகிறார்.

நிலம் அதில் வாழும் மக்கள், அத்தன்மை சார்ந்து உருப்பெறும் பண்புகள், அதனைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் கட்டமைத்த முறை, இதிலிருந்த வரலாறு எழுது முறைமை நாம் எவ்விதம் கட்டமைப்பது என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் ஆய்வுகள் அமைகின்றன. இதனைச் சுருக்கமாகதிணை மரபுசார்ந்த ஆய்வு என்று சொல்லமுடியும். இதனைப் புரிந்துகொள்ள அவரது கலாநிதி பட்ட ஆய்வின் ஒரு பகுதியை இங்கு மேற்கோளாகக் கொண்டு விவாதிக்க முடியும்.

பெரும்பாண் :46-62 வரிகளை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பகுதி :

பள்ளத்தாக்கு, நீர்ப்பாசனப் பகுதிகள், மீன்பிடிப்பு பகுதிகள், கடற்கரைப் பட்டினங்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்கிறார். இதன் மூலம், குலக்குழுக்களின் வாழ்முறை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அது பின்வரும் வகையில் அமைகிறது. “திணைக்கோட்பாடுஎன்பது தமிழரிடையே காணப்பட்ட அகவுறவுகளினதும் அசத்துவ சமூக அரசியல் ஒழுங்கமைப்பினதும் புதை வடிவம் ஆன செய்யுள் மரபு” (2005) இத்தன்மையை ஆற்றுப்படை நூல்களின் மூலம் விரிவாக ஆய்வு செய்கிறார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் எழுதியதிணைக் கோட்பாடுஎன்ற கட்டுரை, இந்திய வரலாற்று ஆய்வாளர்களான ரொமீலா தாப்பார் ஆகிய பிறருக்குப் பண்டைத் தமிழ்ச் சமூக இயங்குமுறை குறித்தப் புதிய ஒளியைப் பெறுவதற்கு உதவியாகக் கூறுகிறார்கள். இப்பின்புலத்தில் பேராசிரியர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளானஅரசமைப்பு உருவாக்கம்’, ‘உயர்குடி மேட்டிமை வளர்ச்சி’, ‘முல்லைத் திணை ஒழுக்கம்ஆகிய ஆய்வுகள் முக்கியமானவை. கலாநிதி பட்ட ஆய்வில் பாண், பொருநர், புலவர், கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலியர் ஆகியோர் குறித்த ஆய்வுகளும் வெறியாட்டு, தை நீராடல், வாடா வள்ளி ஆகிய சடங்குகள் தொடர்பான ஆய்வுகளும் இந்திரவிழா, பங்குனி விழா, ஓண விழா, உள்ளி விழா, சுடர் விழா, நீர் விழா, பூந்தொடை விழா ஆகிய விழாக்கள் தொடர்பான ஆய்வுகளும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் மற்றும் குறத்தியர், வேட்டுவர், ஆயர் தொடர்பான ஆய்வுகளும் தமிழ்ச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் ஆய்வுகளாக அமைகின்றன. துணங்கைக் கூத்து, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, சாக்கைக்கூத்து ஆகியவைத் தொடர்பான ஆய்வுகள், பண்டைத் தமிழ்ச் சமூக அரங்க வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

சடங்கு, விழா, கூத்து சார்ந்து வெளிப்படும் நமது அகத்திணை மரபு சார்ந்து பேராசிரியர் செய்துள்ள பதிவு முக்கியமானது. “திணை உருவாக்கத்தின் புவி இயல் அடிப்படைகளும் அப்புவிஇயல் அடிப்படையின் சமூக நிர்ணயிப்புகளும் ஆண் - பெண் உறவை பாதிக்கின்ற முறைமையை நாம் அகத்திணை மரபுஎன்கிறோம் (2005) என்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் பிற்கால சமூக அமைப்பு குறித்துப் பேட்டன் ஸ்ரைன், நொபுறு கரோஷியா, சுப்பராயலு ஆகிய பலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், சங்க காலம் எனக் கருதப்படும் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை சமசீரற்ற சமூக அமைப்பு என்று கண்டறிந்து அதன் பல்பரிமாணங்களையும் தமது தொடக்கக் கால ஆய்வாக (1960-80) பேராசிரியர் நிகழ்த்தி இருக்கிறார். இவை இவ்வளவு காலம் ஆங்கில மொழியில் தான் இருந்தது. இப்போதுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு உருவாக்கம் குறித்து:

நெகிழ்ச்சியான குடிமுறையிலிருந்து விடுபட்டு வளர்ச்சியடைந்த ஆற்றுப்படுகைகளில் அமைந்த நிலவுடைமை வேளாண்மை மற்றும் இதற்கென உருவான தலைவன் அரசனாக வடிவமைக்கப்பட்ட தன்மையைப் புலவர்களின் பாடல்கள் பேசுகின்றன.” என்கிறார்.

உயர்குடி மேட்டிமை வளர்ச்சி குறித்து:

சமயங்கள், சாதிகள் இவற்றை நிலைநிறுத்தும் அமைப்புகளான மடங்கள் போன்றவை மூலம், மேட்டிமை வளர்ச்சி உருப்பெறுகின்றன.” பேராசிரியரின் இவ்வகையான வரலாற்று ஆய்வுகள் எப்பின்புலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்து விவாதிப்பது அவசியம். மாக்ஸ்முல்லர், ஜான் ஸ்டீவென்சன், மோனியர் வில்லியம்ஸ், எச்.எச். வில்சன் ஆகிய பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி’ (Royal Asiatic Society) மூலம் இந்திய வரலாற்றை எழுதினார். இவர்கள் 1846இல் மொழிபெயர்க்கப்பட்ட ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வரலாற்றைக் கட்டமைத்தனர்.

அதுவே உலகம் முழுவதும் அறியப்பட்ட வரலாறாக இருந்தது. இதற்கு முற்றும் மாறாக, சங்க இலக்கியம், சிந்துவெளி, தொல் பொருள் ஆய்வுகள் வழியாகக் கட்டப்பட்ட பிறிதொரு வரலாற்றின் தர்க்கப் பூர்வமான கட்டமைப்பை பேராசிரியர் ஆய்வுகள் முன்னெடுக்கின்றன. அரசப் பரம்பரை ஆய்வுகளின் போதாமை, அதன் தர்க்கப் பூர்வ ஏற்பு முறைமை ஆகியவை ரிக்வேதம் தொடர்பான ஆய்வுகளோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சமூக ஆய்வுகளின் தர்க்கப் போதாமை இருந்தது. இத்தன்மை பேராசிரியர் ஆய்வுகள் மூலம் நிறைவு செய்யப்படுவதைக் காண்கிறோம். வடமொழி எனப்படும் சமசுகிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளின் பின்புலத்தில் உருவான வேதங்கள்/ ரிக்வேதம், பிராமணங்கள், உபநிடதங்கள், வியாகரணங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகிய மரபின் ஒப்பீடு சார்ந்து ஐரோப்பியர்கள் கட்டமைத்த ஆய்வுகள் இந்தியச் சமூக வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சூழலில், தென்னிந்திய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை, மேற்கூறப்பட்ட முறைகளுக்கு மாற்றான வேறொரு சமூக அமைப்பைக் காட்டுகின்றன என்ற ஆய்வை மார்க்சிய வரலாறு எழுதுமுறை சார்ந்து உருவாக்கியதில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு.

இந்திய வரலாறு எழுதியலில் ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி பின்னர் ரொமீலா, ஹபீப் எனும் ஆய்வாளர்கள் / வடஇந்தியச் சமூகம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்களது ஆய்வுகள் மார்க்சிய வரலாற்று நெறிமுறை சார்ந்த ஆய்வுகள். குறிப்பாக ராகுல்ஜியின் ரிக்வேதம் சார்ந்த ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இந்திய இனக்குழுக்கள் தொடர்பான கோசாம்பி ஆய்வுகளும் அவ்வகையில் முக்கியமானவை. இந்தப் பின்புலத்தில் தென்னிந்திய சமூகம் பற்றிய . சுப்பிரமணியம், நீலகண்ட சாஸ்திரி ஆகிய பிறர் ஆய்வுகள், மானிடவியல், புவிஇயல் மரபு சார்ந்தவையாக அமையவில்லை. பேராசிரியர் ஆய்வுகளே அவ்வகையில் அமைந்துள்ளன. இதனை வரலாற்று அறிஞர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். இவ்வகையில், காலனியம் கண்டெடுத்த இந்திய நிலப்பரப்பின் இருமொழி, இரு பண்பாடு என்பதன் அடிப்படையாக இன்னொரு வரலாறு பேராசிரியரால் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டிருகின்றது. இது இவருடைய மிக முக்கியப் பங்களிப்பு எனக் கூறமுடியும்.

மேலும் ஆய்வுகள் என்பவை நிகழ்த்தப்பட்ட காலத்திலிருந்து, சம காலத்திற்கு வரும்போது, அவை புதிய ஆதாரங்களால் வலுவிழந்து போகும் வாய்ப்பு மிகுதி. பேராசிரியரின் ஆய்வுகள் அவ்விதம் நிகழவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐராவதம் மகாதேவனின் பிராமி எழுத்துத் தொடர்பான ஆய்வுகளும் இவரது ஆய்வுகளும் சந்திக்கும் புள்ளிகளில் முரண் பாடுகளைக் காணமுடியவில்லை.

தமிழக வரலாறு




தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, . . சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு., D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,.தி.மு.) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு. அல்லது .தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.லதமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

. குமார், ஆய்வாளர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

Road once travelled: A 10 A.D. inscription in the Palghat Pass that describes Rajakeseri Peruvazhi, a historical highway that passed through the Kongu region. –

Coimbatore: For those attuned to reading NH-45 or NH-4 or whatever number as they drive on the national highways, this may sound as a different sign board or indication altogether. Have you heard of a ‘Peruvazhi?’ Archaeologists explain that it is the ancient nomenclature for highways. Located at Aiyyasamy Hills, almost 20 km from Coimbatore, in a forest area is an inscription on a rock, dating back to 10 A.D. It speaks of the “Rajakesari Peruvazhi”,also known as “Kongu Peruvazhi.”

The inscription identifies the path as the “peruvazhi,” which connected the west and the east coasts, and passed through the Palghat Pass , Perur, Vellalur and Sulur . It was once even used by the Romans who came to these places for trade.

Though familiar to the local people and those interested in the subject, the rock is still not known to many.

Inspite of surviving for centuries, this rock has only the wooded canopy to protect it from sun and rain.

Discovered nearly two decades ago, the rock earlier had inscriptions in Tamil and Vattezhuthu. Now only the words in Vattezhuthu remain clear. It has a four-line (“venbha”) verse on the Chola King Adhitan, who is said to have strengthened the highways around 10 A.D.

Protecting the rock alone does not need a huge budget, yet the work will involve the Departments of Archaeology and Forest, says an official of the Archaeology Department. “We can ensure that there is no further damage to the inscription due to the vagaries of nature,” he adds.The District Forest Officer, I.Anwardeen, says that even now access to the site is regulated since visitors can enter the forest only with permission from the department. There will be no problem in protecting the rock. The fencing work can be taken up immediately, he says.

அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...

எஸ். இராமச்சந்திரன்




2006-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தேதி வரை தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் செய்தித் தாள்களின் மூலம் பொதுமக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது கண்டுபிடிப்பு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் வி.பி. சதீஷ்குமார், சி. செல்வகுமார் ஆகியோரால் கண்டறியப்பட்ட பிராமி எழுத்துகளில் அமைந்த நடுகற்கள் ஆகும். இவற்றுடைய காலம் கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu April 5, 2006.)

அடுத்த கண்டுபிடிப்பு மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தனியார் ஒருவரால் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்து தற்செயலாகத் தோண்டியெடுக்கப்பட்ட கல்லாலான கைக்கோடரிகள் ஆகும். இக் கைக்கோடரிகள் கி.மு. 1500க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய உலோகப் பயன்பாட்டு யுகத்துக்கு முற்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டு நிலையைச் சேர்ந்த தொழிற்கருவி ஆகும். தொல்லியலாளர்கள் இக்கருவியை 'செல்ட்' (Celt) என்று வழங்குவர். தற்போதைக்கு நாமும் இதனை செல்ட் என்றே குறிப்பிடலாம். இவற்றுள் ஒரு செல்ட்டில் ஹரப்பன் பண்பாட்டுக் காலகட்டத்தை (கி.மு. 2800- கி.மு. 1700)ச் சேர்ந்த சித்திர வடிவக் கருத்துரு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu May 01, 2006).

இக் கட்டுரையின் நோக்கம் மேற்குறித்த இரு கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும், இவற்றின் மூலம் செய்யப்படும் பரபரப்பு அம்சம் சார்ந்த பிரசாரம் பற்றியும், தமிழ் மொழி குறித்த பெருமித உணர்வுக்கு தீனி போடுகின்ற முயற்சி பற்றியும் விவாதிப்பதே ஆகும்.

சில கேள்விகள்

முதலாவது கண்டுபிடிப்பாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நடுகற் கல்வெட்டுகள் ஐயத்துக்கு இடமற்ற வகையில் மிக அரிய கண்டுபிடிப்பாகும். இன்றைய நிலையில் இந்த நூற்றாண்டின் முதன்மையான கண்டுபிடிப்பாக இவற்றைச் சொல்லலாம். ஏனென்றால், சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் "வேள் ஊர் அவ்வன் பதவன்" என்றும், அடுத்த நடுகல்லில் "அன் ஊர் அதன்.. அன் கல்" என்றும், மூன்றாவது நடுகல்லில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் 'மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்' என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் 'பொன்புனை திகிரி' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் ('அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ') கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.

இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும். கி.மு. 1500-1000ஆண்டுகளுக்குள் ·பினிஷியா (Phoenecia) என்ற மத்திய தரைக்கடல் நாட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட வட அரமைக் (Aramaic) எழுத்துகளைப் பின்பற்றிக் கி.மு. 4ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்திய மொழிகளின் ஒலிகளுக்கேற்ப உருவாக்கிக் கொள்ளப்பட்ட எழுத்து முறையே பிராமி எழுத்து முறையாகும். தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்திய அகர வடிவ எழுத்து முறையாகிய பிராமி எழுத்து முறையைத் தமிழ் மொழியின் ஒலிப்பு முறைக்கேற்பச் சில மாற்றங்களுடன் சுவீகரித்து வடிவமைத்து, ஓரளவு கல்வியறிவும் படிப்பறிவும் உள்ள மக்கள் புரிந்து கொள்வதற்குத் தக்க வகையில் அதனைக் கல்லில் பொறித்து வைப்பது என்பது, சமூக அமைப்பும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் பெருமளவு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தால்தான் சாத்தியமாகும். எனவே, இந்நடுகல் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் எழுப்பப்பட்ட நடுகல்லாகவே இருக்க வேண்டும். அதே நேரத்தில், வேறு ஒரு முதன்மையான வரலாற்று உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மெளரியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கர் தாம் எழுதிய இந்திகா என்ற நூலில் பாண்டியா என்ற அரசி தனது நாட்டை 360 ஊர்களாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மையான பொருள், பாண்டிய நாட்டில் சுயச் சார்புடைய ஊராட்சி நிர்வாகம் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது என்பதுதான். அந்த அடிப்படையில் பார்த்தால், வரையறுக்கப்பட்ட ஆட்சி நெறிமுறைகள் மற்றும் சட்ட நெறி முறைகளுடன் கூடிய நிர்வாகம் வட்டார அளவில் பரவலாக நடைபெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. அந்த நிர்வாக அமைப்பின் ஓர் அங்கமான வீரனே இந்நடுகல் வீரன் என்று கொள்வதில் தவறில்லை. அதாவது, அவன் ஒரு பணிமகனாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குடிகளுக்குத் தலைமைப் பகுதி வகித்த அல்லது குடி காவலராக இயங்கிய சமூக அமைப்பே அப்போது நிலவியிருக்க வேண்டும். அத்தகைய ஒரு சமூக அமைப்பில் குடிகாவலனாகச் செயல்பட்ட ஒரு வீரனே இந்நடுகல் வீரன் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

மாட்டு மந்தைகளே செல்வமாகவும் அறநெறிப்பட்ட வீரமே ஆண்மையின் இலக்கணமாகவும் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில் போரில் ஈடுபடும்போதுகூட, பசுக்கள், பிராமணர், பெண்டிர், நோயாளிகள் போன்றோர்க்கு ஊறு நேராத வகையில்தான் போரிட வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டது. 'ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை' என்ற புறநானூறு 9ஆம் பாடல் வரிகளே இதற்கான ஆதாரம் ஆகும். மாடுகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்வதென்பது 'வெட்சிப் போர் முறை' என்றும், மாடுகளைக் காப்பது அல்லது கள்வர்களிடமிருந்து மீட்பது என்பது 'கரந்தைப் போர் முறை' என்றும் வழங்கப்பட்டன. பழந்தமிழ் இலக்கணமாக தொல்காப்பியம் கரந்தைத் திணையுடன்தான் நடுகல் வழிபாட்டைத் தொடர்புபடுத்துகிறது. எனவே, இந்நடுகல்லில் குறிப்பிடப்படும் தீயன் அந்துவன் என்பவன் கூடலூரைச் சேர்ந்த ஆனிரை கவரும் வெட்சிப் போர் மரபினரிடமிருந்து ஆனிரைகளை மீட்கின்ற முயற்சியில் இறந்துள்ளான் என்பதையும், நாகரிக வாழ்க்கை நடைமுறைகளை நிர்ணயித்து நெறிப்படுத்தி நிர்வகித்த ஆட்சியாளர்கள் தமது நிர்வாகத்தின் ஓர் அங்கமாகிய படைப்பிரிவைச் சேர்ந்த தீயன் அந்தவனுக்கு (இவன் படைப்பிரிவின் ஒரு தலைவனாக இருக்கக்கூடும்) நடுகல் எடுத்துள்ளனர் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அந்தவன் என்பது இந்நடுகல் வீரனது பெயராகும். தீயன் என்பது இவனது குலமாக இருக்க வேண்டும். கூடலூர்ப் பகுதிக் கணவாய் மத்திய கேரளம் மற்றும் வட கேரளப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் கணவாய்களுள் ஒன்றாகும். கேரளத்தின் அப்பகுதிகளில் வாழ்வோருள் தீயர் என்று அழைக்கப்படுகின்ற ஈழவர் சமூகப் பிரிவினர் முதன்மையானவர் ஆவர். கி.பி. 10-12ஆம் நூற்றாண்டைய தமிழ்க் கல்வெட்டுகளில் 'தீயமாள்வான்' என்ற அடைமொழியுடன் சில வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தீயம் என்பது த்வீபம் (தீவு) என்ற சொல்லின் தமிழ்த் திரிபாகக் கருதப்படுகிறது. ஈழத் தீவுக்கும் இக்குலப் பெயருக்கும் தொடர்பிருக்கக்கூடும். ஈழவர் சமூகத்தவர் ஈழத்தீவிலிருந்து குடியேறியவர்களா என்பது தனித்த ஆய்வுக்குரியது. இப்போதைய நிலையில் தீயர் என்போர் ஈழவர் குலப்பிரிவினர் எனக் கொள்வதில் தவறில்லை. வட கேரளத்திலுள்ள ஒரு மாவட்டப் பகுதியாகிய வயநாடு என்பது வயவர் நாடு என்பதன் சுருக்கமாகும். ஈழவர் சமூகத்தவரை வயவர் என்று அழைப்பது அப்பகுதியில் வழக்கம். எனவே இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அந்துவன், ஈழவர் சமூகப் பிரிவினனாகவே இருக்க வேண்டும். ஈழவர் சமூகத்தவர் போர்க்கலைப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் போர்க்கலையைக் கற்பிக்கும் ஆசான் மரபினர் என்பதும் வடக்கன் பாட்டுகள் என்கின்ற கேரள நாட்டின் பழமையான நாட்டுப் பாடல்களால் தெரிய வருகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நாணயவியல் அறிஞர் தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிங்கத்துடன் போரிடும் வீரன் ஒருவனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பழங் காசினைக் கண்டறிந்தார். அக் காசில் 'தீயன்' என்று பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்ததையும் படித்து வெளியிட்டார். எனவே 'தீயன்' என்ற இக்குலப்பெயர் சங்ககாலத் தமிழரிடையே பரவலாக அறிமுகமான ஒரு பெயரே என்றும் போர்க்கலைப் பயிற்சியுடனும் வீரத்துடனும் அறப்போர் மரபுடனும் தொடர்புடைய ஒரு குலப் பெயராக இருந்துள்ளது என்றும் தெரிகின்றன.

இப்போது தமிழ்ச் சமூக வரலாறு குறித்த அடிப்படையான சில கேள்விகளைப் பரிசீலிப்போம். முதற்கேள்வி, தமிழகத்தில் க்ஷத்திரிய வருணம் அல்லது அரச குலம் என்ற ஒன்று இருந்துள்ளதா என்பதாகும். அடுத்து, அரச குலம் என்ற ஒரு குலம் இருந்தது என்று விடை கிடைத்தாலும் அக்குலம் எவ்வாறு உருவாயிற்று; பிற்காலத்தில் அக்குலம் என்ன ஆயிற்று என்ற கேள்விகள் எழுகின்றன. தீயர் சமூகத்தவரின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் இக் கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு. மறப்போர்முறை என்பது பிறநாடுகளைக் கொள்ளையிடுவதற்கும், வென்று அடிமைப்படுத்துவதற்கும் எவ்வாறு பயன்பட்டதோ அது போன்றே தம் நாட்டின் குடிகளை ஆள்வதற்கும் காப்பதற்கும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற வழக்குகளையும் பூசல்களையும் தீர்ப்பதற்கும், அறப்போர் முறையில் தேர்ந்த நிர்வாகிகள் பயன்பட்டனர். 'தண்ட நீதி' எனப்படும் க்ஷத்திரிய நீதிமுறைக்கு[1] அடித்தளமாக அமைவன 'பிரஜானாம் பரிபாலனம்' என்ற குடிகாவல் முறையும், சரணடைந்தவர்களை எப்பாடுபட்டேனும் காக்கின்ற 'அபயதானம்' எனப்படும் வல்லமையும் ஆகும். எனவே, அறப் போர்முறை சார்ந்த பயிற்சிகளைக் கற்பிக்கின்ற குலமாக அறியப்படுகின்ற ஈழவர் குலம் பண்டைக்கால தென்னிந்தியச் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கு ஆற்றியிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது தவறாகாது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் ஈழவர் சமூக மடத்திலுள்ள கி.பி. 17ஆம் நூற்றாண்டுச் செப்பேடு ஒன்றில்[2] செளந்தர பாண்டியன் என்ற பெயருடன் மதுரையை ஆண்ட சொக்கநாதப் பெருமானின் மாமன் மலையத்துவஜ பாண்டியனைத் தங்கள் குல முன்னோராக ஈழவர்கள் பெருமையுடன் குறித்து வைத்துள்ளனர். பாண்டியா என்ற பெயரில் மெகஸ்தனிஸ¤ம், மலையத்துவஜ பாண்டியனின் மகளான தடாதகைப்பிராட்டி அல்லது மீனாட்சி அம்மை என்று புராணங்களும் குறிப்பிடுகின்ற பெண்மணியைத் தமது குல மூதாதையாக ஈழவர் கருதியுள்ளனர் என்பது இதற்குப் பொருளாகும். இத்தகைய பிற்காலச் செய்திகளைத் தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வுக்கு அடிப்படையான ஆதாரங்களாகக் கொள்வது எந்த அளவுக்குச் சரியானது என்ற கேள்வி எழுவது இயல்பு. வேறு பல சாதியினரின் செப்பேடுகளையும் ஆவணங்களையும் சேகரித்து, படித்து, தொகுத்து வெளியிட்டால் இந்த ஆராய்ச்சியை இன்னும் உயர்ந்த ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை நாம் எப்போது செய்யப் போகிறோம் என்பதுதான் முதன்மையான கேள்வி. அத்தகைய ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டால் 21ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தொல்லியல்-சமூக வரலாற்றியல் நிகழ்வு என்று அதனைத் தயங்காமல் சுட்டிக்காட்டிப் பெருமிதம் கொள்ளலாம்.

இப்போது, மே 1ஆம் தேதி The Hindu இதழில் 'Discovery of a Century' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தற்செயலாகக் கண்டறியப்பட்ட இரண்டு செல்ட்டுகள் பற்றிய செய்தியைப் பரிசீலிப்போம். அவற்றுள் ஒரு செல்ட் கி.மு. 1500ஆவது ஆண்டைச் சேர்ந்தது என்றும் அதில் சிந்து சமவெளி எழுத்துக் குறியீடுகள் நான்கு பொறிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக் கல்வெட்டாய்வாளர்கள் அக் குறியீடுகளை அடையாளம் கண்டறிந்தனர் என்றும் அத்துறையின் சிறப்பு ஆணையர் திரு. டி. எஸ். ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளை ஐயத்துக்கு இடமற்ற வகையில் படித்துப் பொருள் விளக்கம் கூறி 'Early Tamil Epigraphy' என்ற தலைசிறந்த நூலை எழுதி வெளியிட்டுள்ள திரு. ஐராவதம் மகாதேவன் மேற்குறித்த செல்ட்டில் இடம்பெற்ற எழுத்துகள் கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையெனக் கணித்துள்ளார். மேலும், இக்கற் கருவி தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட கருவியே என்றும் சிந்து சமவெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதன்று என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இக் கருவியிற் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஒத்த சில வடிவங்கள் சிந்து சமவெளி சுடுமண் முத்திரைகளில் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றைத் தாம் 'முருகன்' என்று படித்துள்ளதாகவும் திரு மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். அத்துடனன்றி, சிந்து சமவெளி நகரங்களில் வாழ்ந்த மக்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்த புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்களும் ஒரே மொழியைத்தான் பேசினர் என்றும் அம்மொழி திராவிடமாகத்தான் இருக்க முடியுமென்றும் இந்தோ-ஆரிய மொழியாக இருக்க முடியாது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பு நாம் முன்னர் கண்ட பிராமி எழுத்துப் பொறித்த நடுகல்லை ஒத்ததன்று. நடுகல் கல்வெட்டு அகர வடிவ ஆதியான (ஓரொலிக்கு ஓரெழுத்து என்ற முறைப்படி அமைந்த) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கற்கால செல்ட்டில் பொறிக்கப்பட்டிருப்பதாக மேற்குறித்த அறிஞர்கள் கருதும் வடிவங்கள் கருத்துகளின் குறியீடுகளாக அமைந்த சித்திர வடிவ எழுத்துகளாகும். இவை எழுதுகின்ற நோக்கில் பொறிக்கப்பட்ட எழுத்துகளா அல்லது தற்செயலாக விழுந்த கொத்துப் பொறிப்புகளா என்பதே ஐயமாக உள்ளது. இது கி.மு. 1500ஆம் ஆண்டைச் சேர்ந்த புதிய கற்கால செல்ட் என்பது ஏற்கத்தக்கதே. வட தமிழகத்தில் சில பகுதிகளில் இத்தகைய கற்கருவிகள் ஏராளமான அளவில் கண்டறியப்பட்டுள்ளன. இவை பயன்படுத்தப்பட்ட நாகரிக நிலையெல்லாம் இறந்த காலமாகப் போய்விட்ட பிறகு இன்றைக்கு சுமார் 1500 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதிக்கு இக்கற்கருவி கொண்டுவரப்பட்டுப் பொற்கொல்லர் போன்ற நுட்பமான பணி செய்வோரால் அடைகல்லாக (Anvil) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அப்போது விழுந்த கொத்துகளாக இவை இருக்கவும் வாய்ப்புண்டு. இவற்றை எழுதுகிற நோக்கில் பொறிக்கப்பட்ட கருத்துக் குறியீட்டுச் சித்திர எழுத்துகள் என்பது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டாலும் கூட, புதிய கற்காலப் பண்பாட்டு நிலைக்கும் இத்தகைய பொறிப்பு எழுத்துகளுக்கும் தொடர்பு இருந்தது எனக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஹரப்பன் நாகரிகத்தோடு தொடர்புடைய நகரங்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்ந்து கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இந்தியாவின் வடமேற்குப் பகுதி நாடுகளிலும், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் வரையிலும் விரிந்து பரந்திருந்த ஒரு நாகரிகம் ஹரப்பன் நாகரிகமாகும். இந்நாகரிகம் அழிந்ததற்கான காரணங்கள் இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லை. என்றாலும் கூட, கி.மு. 1700 அளவில் ஒரே சமயத்தில் இந்நாகரிகம் அழிந்திருக்கவேண்டும் என்று தொல்லியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

கற்கருவிகளையும், செம்புக் கருவிகளையும் பயன்படுத்திய நாகரிகம் (Chalco-lithic Civilisation) என்று இதனைக் குறிப்பிடுவது வழக்கம். இரும்பை உருக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற உறுதியான மரங்களை வெட்டுதல் போன்ற பணிகளுக்கு அவர்கள் கற்கோடரிகளையே கழிகளில் பொருத்திப் பயன்படுத்தினர். செம்பு மற்றும் செம்பு சார்ந்த உலோகக கலவைகளால் ஆன பல கருவிகளையும் வேறு பல பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்தினர். அதே வேளையில் அந்நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம். பல்வேறு விதமான படிநிலைகள் கொண்ட சமூக அமைப்பினையும், ஒருவிதமான அடிமை முறையையும் ஆதாரமாகக் கொண்டே அந்த நாகரிகம் இயங்கியது. அதற்கெனத் தெளிவான இலக்கணங்களுடன் கூடிய எழுத்து முறை இருந்தது என்பது தெரிய வருவதால் எழுத்து வடிவிலான சட்டங்கள் நிர்வாக நடைமுறை போன்றவையும் அவை சார்ந்த கல்வி முறையும் அங்கு வழக்கத்திலிருந்திருக்க வேண்டும். பிற வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்புகள் இருந்துள்ளன. அரசு என்ற அமைப்பு இருந்தால்தான் இவையெல்லாம் சாத்தியம். ஆனால், புதிய கற்கால நாகரிகம் என்பது கி.மு. இரண்டாயிரம் முதல் கி.மு. ஆயிரம் வரை தென்னிந்தியாவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டு நிலையாகும். புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்த மக்கள் சமூகத்தவரிடையே ஒருவிதமான பழங்குடிச் சமூகக் குடியரசு இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஊர் என்று குறிப்பிடத்தக்க நிரந்தரக் குடியிருப்புகளோ சொத்து எனக் குறிப்பிடத்தக்க நில உடைமையோ இல்லாத பண்பாடு நிலை அது. அக்கால கட்டத்தில் நதி நீர்ப்பாசன வசதிகளோ நில வருவாய் நிர்வாக அமைப்புகளோ இருந்தன என ஊகிக்பதற்குரிய தடயங்களோ, காரண காரிய அடிப்படையோ எவையும் இல்லை. நெருப்பின் பயன்பாட்டினை அவர்கள் அறிந்திருந்தனர் என்பது உண்மை. விலங்குகளின் தோலையும், இலை தழைகளையுமே அவர்கள் ஆடையாக உடுத்தியிருக்க வேண்டும். பருத்தியின் பயன்பாட்டை அவர்கள் அறிந்திருந்தனர் என்றோ நெசவுக் கருவிகள் பயன்பட்டில் இருந்தன என்றோ சொல்வதற்கு எந்த அடிப்படையும் ஆதாரத் தடயமும் இல்லை. மாடுகளை அவர்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கத் தொடக்கி விட்டனர் எனத் தெரிகிறது. புதர்களைக் கொளுத்திவிட்டு அந்தச் சாம்பலையும் மாட்டுச் சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தி நேரடியாக மழையைப் பயன்படுத்தி பயிர்செய்யும் மானாவாரி (வானமாரி?) விவசாயத்தை அவர்கள் அறிந்திருந்தனர்.

மாடுகள் பொதி சுமக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், உழவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ஏர்க்கலப்பை என்பது அவர்கள் அறியாத ஒன்றாகும். நிலத்தைக் கிண்டிக் கிளறிச் செய்யப்படும் களைக்கொட்டு வேளாண்மை என்று சொல்லக்கூடிய விவசாய முறையையே அவர்கள் பயன்படுத்தினர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவிக்கு தமிழில் என்ன பெயர் என்று ஆராய்ந்தால் ஒரு சில குறிப்புகள் கிடைக்கின்றன. கணிச்சி என்ற ஒருவித ஆயுதத்தை ஏந்திய கூற்று என்ற தெய்வம் காளையை வென்ற தெய்வம் என்றும், எருமையைக் கொன்ற தெய்வம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எருமையைக் கொன்ற தெய்வம் என்ற படிமம் கொற்றவை என்ற பெண் தெய்வத்துக்கு உரியதாக்கப்பட்டு அத் தெய்வம் திகிரி என்ற வளைதடியை ஏந்திய தெய்வமாக பிற்காலச் சிற்ப மரபில் சித்திரிக்கப்பட்டது. ஆனால், கொற்றவையின் ஆண் வடிவமாகிய கூற்று என்ற ஆண் தெய்வமோ, காளையைக் கொல்லாமல் வென்று அடிமைப்படுத்தியதோடு, கணிச்சி என்ற ஆயுதத்தையும் ஏந்திய தெய்வமாக இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதற்கேற்பப் பிற்காலச் சிற்ப மரபில் காளையைக் கொடியாகவோ அல்லது வாகனமாகவோ ஏற்றுக் கொண்டும், மழு என்ற கோடரியை ஆயுதமாகக் கொண்டும் விளங்குகின்ற சிவனாகச் சித்திரிக்கப்பட்டது. மழு என்பது பயன்பாட்டு அளவில் பார்த்தால் கணிச்சியுடன் தொடர்புடையதன்று. மழுவினைக் கோடரி என்று கொள்ளலாம். கணிச்சி என்பது நிலத்தைத் தோண்டுவதற்கும் பயன்பட்ட ஓர் ஆயுதமென்பது சங்க இலக்கியங்களில் தெளிவுபடக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில், கணித்ர என்ற சொல் இதனோடு தொடர்புடையாதகத் தோன்றுகிறது. கணித்ரிமா என்ற சமஸ்கிருதச் சொல் கணித்ர என்ற கருவியால் தோண்டப்பட்டது என்ற பொருளில் கிணற்றைக் குறிக்கும். எனவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கணிச்சி என்ற உலோகக் கருவியின் பூர்வ வடிவம் கூற்றுத் தெய்வத்தின் கையில் இடம் பெற்றிருந்த நிலத்தைத் தோண்டுவதற்கும் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்ட கருவியே ஆகும். இதுதான் புதிய கற்கால செல்ட்டாக இருக்க வேண்டும்[3].

உலோகத்தின் பயன்பாட்டை அறிந்திராத புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்கள் வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் என்ற நிலையிலிருந்து சற்று முன்னேறிப் பழங்குடி வேளாண்மை என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை எட்டியிருந்தனர். இவர்களால் சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Grayware) பயன்படுத்தப்பட்டன. இப்பண்பாட்டின் இறுதிக் கட்டத்தில்தான் சக்கரம் போன்ற ஓரமைப்பின் மூலம் மட்பாண்டம் வனைந்து அதனை நெருப்பில் சுட்டுப் பதப்படுத்திப் பயன்படுத்தும் அறிவு முதிர்ச்சி ஏற்பட்டது. மொத்தத்தில் இம்மக்கள் முன்னேறிய சமூகத்தவருடன் நெருக்கமான உறவுகளோ பொருள் பரிவர்த்தனையோ வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருக்க, இவர்களையும், ஹரப்பன் நாகரிக மக்களையும் ஒரே நாகரிக நிலை என்ற தட்டில் வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது. ஹரப்பன் நாகரிகக் காலகட்டத்தைச் சேர்ந்த வாழ்விடம் என்று சொல்லத்தக்க கட்டடச் சிதைவுகள் எவையுமே தென்னிந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை நாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் ஹரப்பன் நாகரிகம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான ஒரு மொழியைப் பேசிய மக்கள் தொகுதியினரின் நாகரிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்ற உண்மையை மறுப்பதற்காக அல்ல. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழியை ஹரப்பன் நாகரிக மக்கள் பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இன்றைக்குத் தமிழ்நாடு என்று வழங்கப்படுகிற நிலப்பகுதியுடன் ஹரப்பன் நாகரிகத்தை இணைக்கின்ற ஓர் அவசரக் கோல முயற்சியில் தொல்லியலாளர்கள் மற்றும் கல்வெட்டாய்வாளர்கள் இறங்கும்போதுதான் இதில் பிரச்சினை எழுகின்றது. திராவிட மொழிகள் என்ற சொல்லாட்சி கி.பி. 1819இல் சென்னையில் மாவட்ட ஆட்சியராக இருந்த 'பிரான்சிஸ் வைட் எல்லிஸ்' என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். தமிழ் என்ற சொல்லின் சமஸ்கிருதத் திரிபாகிய த்ரமிடம் அல்லது த்ராவிடம் என்ற வழக்கு தமிழ் மொழியை முதன்மையான உறுப்பினராகக் கொண்ட ஒரு மொழிக் குடும்பத்தைக் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஹரப்பன் பண்பாட்டு மக்களிடையே இம் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழிதான் வழங்கியிருக்க வேண்டும் என்பதும் வலிமையான ஒரு கருத்தே. ஆனால், அம் மொழியின் பெயர் திராவிடம் என்றோ தமிழ் என்றோ இருந்திருக்க முடியாது. அம் மொழியின் பெயர் என்ன; சொற்கள், சொற்றொடர்க் கட்டுமானங்கள், அவற்றிற்கான இலக்கணங்கள் ஆகியவற்றை நாம் எவ்வாறு புலனாய்ந்து கண்டுபிடித்து மறுநிர்மாணம் செய்யப் போகிறோம் என்பன போன்ற மிகப் பெரிய சவால்கள் நம்முன் எழுகின்றன. இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டிய தொடக்க நிலையில் இருக்கின்றோம். அப்படி இருக்க, இப்பொழுதே ஹரப்பன் சித்திர வடிவ குறியீடுகளுக்கு பொருள் விளக்கம் கூறி அவற்றைத் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கற்காலக் கருவியில் உள்ள சில கொத்துப் பொறிப்புகளுடன் தொடர்புபடுத்துவது என்பது சரியான ஆய்வு நெறிமுறையின் பாற்பட்டதாகுமா? முருகு என்ற தெய்வத்தின் அடையாளக் குறியீடாகக் கருதி வழிபடப்பட்ட ஆயுதம் 'வேல்' ஆகும். அது உலோகக் கருவியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. கற்கருவியாகிய கணிச்சியுடனோ பழங்குடி வேளாண்மையுடனோ முருகு என்ற தெய்வத்தைத் தொடர்புபடுத்துவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? புதிய கற்காலக் கருவியில், அப்பண்பாடு நிலவிய காலகட்டத்திலேயே கற்கருவிகளைக் கொண்டு இந்த எழுத்து பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்குமானால் அது வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக அல்லவா இருக்கிறது? அவ்வாறன்றித் தமிழகத்தில் இரும்பு யுகம் அறிமுகமான காலகட்டம் என்று உத்தேசமாகக் கணிக்கப்படுகின்ற கி.மு. 9-8ஆம் நூற்றாண்டளவில் இரும்பு, ஆணி அல்லது உளி கொண்டு இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இக்கருத்து கூறப்பட்டிருப்பதாக நாம் பொருள் கொண்டாலும் செம்பு-கற்கருவிப் பண்பாடாகிய ஹரப்பன் பண்பாட்டுக்கும் இரும்பு யுகம் எனப்படுகின்ற பெருங்கற்படைக் காலப் பண்பாட்டுக்கும், பண்பாட்டு மட்டத்திலும் கால அடிப்படையிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளனவே - அவற்றை எப்படி இட்டு நிரப்புவது? இவை போன்ற அடிப்படையான பல கேள்விகளை ஆய்வாளர்கள் முன்னிலையில் நாம் எழுப்ப விழைகிறோம்.

சில ஆலோசனைகள்

ஹரப்பன் நாகரிகத்தவரால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையைப் பற்றியும் அவர்களிடையே வழங்கிய மொழி பற்றியும் ஆய்வு செய்வதற்கு முனைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முதன்மையான அறிவுரையை செக்கோஸ்லோவேக்கிய நாட்டுத் தமிழியல் அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அகழ்வாய்வுகளின் மூலமும் தர்க்கவியல் அடிப்படையில் அமைந்த ஊகங்களின் மூலமும் ஹரப்பன் மக்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அப்பொருள்களின் பழம்பெயர்கள் என்ன என்பதைக் கண்டறிந்து மொழியியல் அடிப்படையில் அப்பெயர்களை மறுநிர்மாணம் செய்வதில் அறிஞர்கள் ஈடுபடலாம் என்று கமில் சுவலபில் ஆலோசனை தெரிவித்துள்ளார்[4]. அவருடைய அந்த ஆலோசனையைப் பின்பற்றிக் கீழ்வரும் கருதுகோள் நம்மால் அறிஞர்களின் பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது:

சங்க இலக்கியங்களில் நாஞ்சில் என்ற உழுகருவி குறிப்பிடப்படுகிறது. இது ஏர்க்கலப்பையையே குறிப்பிடுகிறது என்றாலும் இரும்புக் கொழு பொருத்திப் பயன்படுத்தப்பட்ட ஏர்க்கலப்பை வடிவத்துடன் பிற்காலத்தில் கலந்து ஒன்றிப்போன ஒரு பழமையான உழுகருவியே நாஞ்சில் எனத் தெரிகிறது. நமது ஊகத்துக்கு அடிப்படையாக அமைவது 'நாஞ்சில் படையோன்' எனக் குறிப்பிடப்படும் பலராமன், இரும்பு யுகத்துக்கு முற்பட்ட செம்பு-கற்கால நாகரிகத்தவன் என்றும் தனது நாஞ்சிலை மாடுகளில் பூட்டி உழுவதற்குப் பதிலாகத் தன் கைகளாலேயே பயன்படுத்தினான் என்றும் நாம் பொருள்படுத்துவதற்கான சில குறிப்புகள் புராணங்களில் காணப்படுவதுதான்[5]. நாஞ்சில் என்ற இச்சொல் நாங்கிர் என்று மராட்டிய மொழியிலும் நாகலி எனத் தெலுங்கிலும் நேகிலு எனக் கன்னடத்திலும் லாங்கல என சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகிறது. தமிழ் நிகண்டுகள் நாஞ்சில் என்ற சொல்லுக்கு ஏர்க்கலப்பை என்ற பொருளையும் மதிலுறுப்பு என்ற பொருளையும் குறிப்பிடுகின்றன. மதிலுறுப்பு என்பது கற்கோட்டைகளின் பிரம்மாண்டமான வாயிற்கதவுகளை மூடிய பின்னர் குறுக்கே அணைத்து இடப்படும் வலிமையான மரக்கட்டை என்று பொருள்படக்கூடும். ஏனென்றால், இன்றைக்கும் கோயிற் கோபுரங்களின் வாயிற்கதவுகளை மூடிய பின்னர் கதவுகளின் பின்புறம் இடப்படும் மர உத்தரங்களை நாங்கில் மரம் எனப்படும் சில்வர் ஓக் மரங்களால் செய்து இடும் வழக்கம் உள்ளது. இதற்கு நாங்கில் மரத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம் தற்போதைய தச்சாசாரிமார்களுக்குக் கூடத் தெரிவதில்லை. ஆனால், இம்மரம் அதிர்வுகளைத் தாக்குப் பிடித்து வளைந்து கொடுத்து எதிர்த்து நிற்கக் கூடியவை என்றும், அதே நேரத்தில் கனம் குறைந்தவை என்பதால் எளிதில் சுமந்து செல்ல முடியும் என்றும் தச்சாசாரிமார்கள் கூறுகின்றனர். பழங்காலத்தில் கோட்டை வாயிற் கதவுகள் எதிரி அரசர்களின் யானைகளால் தாக்கப்படும்போது, அந்தத் தாக்குதலை எதிர்த்துத் தாக்குப் பிடிப்பதற்காக நாங்கில் மரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். சுமப்பதற்கு எளிது என்பதால் மனிதர்களே தம் கைகளால் இதனை உழுகருவியாகப் பயன்படுத்தி நிலத்தை உழுதிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் மரங்கள் படகுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவதுண்டு என்று தச்சர்கள் குறிப்பிடுகின்றனர். பலராமன் 'லாங்கல' என்ற தன் ஆயுதத்தால் யமுனை ஆற்றை இழுத்து வந்தான் என்ற குறிப்பு புராணங்களில் காணப்படுகிறது. இது நதி நீர்ப்பாசன முயற்சிகளைக் குறிக்கும் என நாம் புரிந்துகொள்ள இயல்கிறது. சிந்து நதி பாய்ந்த செழிப்பான நிலப்பகுதிகளில் வாய்க்கால்கள் வெட்டி நீரைத் தேக்கி விவசாயம் செய்து வாழ்ந்த ஹரப்பன் பண்பாட்டு மக்கள் கைகளின் உதவியுடன் நிலத்தை உழுகிற நீண்ட கழிகளையே உழுகருவிகளாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது தொல்லியல் அறிஞர்களின் முடிபு ஆகும். மேலும், ஹரப்பன் பண்பாட்டு காலகட்டத்தைச் சேர்ந்த 'லோதல்' போன்ற துறைமுகங்களில் கப்பல்களும் படகுகளும் கட்டும் பணிகள் பெருமளவில் நடந்திருக்க வேண்டும். இத்தகைய பணிகளுக்கெல்லாம் நாங்கில் மரம் பெரிதும் பயன்பட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் என்ற சொல் கூட ஹரப்பன் மொழியில் வழங்கியிருக்கலாம்.

இது தொடர்பாக நாம் கூற விரும்புகின்ற ஆலோசனை என்னவென்றால், ஹரப்பன் எழுத்து பொறிப்புகளைப் படித்துப் பொருள் விளக்கம் அளிக்கின்ற முயற்சியில் முதன்மையாக ஈடுபட வேண்டியவர்கள் பன்மொழிப் புலமை வாய்ந்த அறிஞர்களும், திராவிட மொழியியல் அறிஞர்களும் ஆவர். இவர்களுக்குத் தொல்லெழுத்தியல் (Palaeography) பற்றிய பரிச்சயம் தேவை. இவர்களுடன் தொல்லியல் அறிஞர்களும், கல்வெட்டு அறிஞர்களும், மானிடவியல், சமூகவியல் அறிஞர்களும் இணைந்து முயற்சி மேற்கொண்டாலன்றி ஹரப்பன் எழுத்துகளைப் படித்துப் பொருள் விளக்கம் சொல்வதென்பது 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என்று நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்[6].

அடிக்குறிப்புகள்:

[1] "நேமியளவும் வழங்கிய ஈழ தண்டம்" என்ற தொடர் தமிழிலக்கிய உரையாசிரியர்கள் சிலரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழவர் தண்ட நீதி என்பது 'சான்றவர் சிரம நீதி' என்று வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்படும் போர்க்குடியினரின் நீதிமுறையோடு ஒத்ததாக இருக்கலாம். அரச குலத்தவர் இருவருக்குள் சொத்துரிமை குறித்து நேர்கின்ற வழக்கினைத் தீர்க்க முடியாத நிலை தோன்றினால் அங்கப் போர் முறையின் மூலம் அவ்வழக்கு தீர்க்கப்படும். இது போன்ற தண்ட நீதி முறைகள் இலங்கையில் வழக்கில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க: 'South India and Sri Lanka' by K.K. Pillay, Madras University, 1975 - pp. 168-170.

[2] இச்செப்பேடு சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதுரை பதிவு அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது சென்னையிலுள்ள அத்துறைத் தலைமை அலுவலத்தில் பாதுகாக்கப்படுகிறது. இச்செப்பேட்டின் வாசகங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் பொறிக்கப்பட்டுள்ள கி.மு. முதல் நூற்றாண்டாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டில் 'அந்துவன்' என்ற ஆட்பெயர் குறிப்பிடப்படுகிறது. (p. 319, Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, Cre-A, Chennai, India, 2003) அதே மலையில் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற "எருகாடூர் இழகுடும்பிகன் (ஈழக் குடும்பிகன்) போலாலையன்" என்பவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (மதுரையிலிருந்த ஈழவர் சேரியைச் சேர்ந்த பூதன் தேவனார்) என்ற புலவர் பெயர் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்துவன் அல்லது அந்தவன் என்ற ஆட்பெயர் மதுரைப் பகுதியில் பரவலாக வழங்கியுள்ளது என்பதையும் ஈழவர் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்க சமூக அந்தஸ்துடன் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இக்குறிப்புகளால் தெளிவாக உணர முடிகிறது.

[3] கொற்றவை என்ற பெண் தெய்வமே வெட்சிப் போர் மரபினராகிய வேட்டைக்குடியினரின் தெய்வமாகும். இத் தெய்வம் late palaeolithic civilisation எனத் தொல்லியல் பரிபாஷையில் வழங்கப்படுகிற, பழைய கற்காலத்தில் பிற்பட்ட பண்பாட்டு நிலையைச் சார்ந்த எயினர், கள்வர் போன்ற குலத்தவர்களின் வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று என்று கொள்ளலாம். மாறாக, கூற்று என்ற ஆண் தெய்வம், வெட்சிப் போர் மரபிலிருந்து முன்னேறி, தொடக்க நிலை விவசாய முயற்சிகளை மேற்கொண்ட மள்ளர் (பள்ளர்) குலத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று எனலாம்.

[4] 'சிந்து வெளி - அண்மைக்கால முயற்சிகள்' என்ற தலைப்பில் கமில் சுவலபில் அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னால் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னை ஆய்வு வட்டம் வெளியிட்டுள்ள 'ஆய்வு வட்டக் கட்டுரைகள்' முதல் தொகுதியில் வெளிவந்துள்ளது.

[5] Velir: Were they the Velalars? - S. D. Nellai Nedumaran and S. Ramachandran. A paper presented at the XXIV annual Congress of the Epigraphical Society of India, Trissur, Kerala, 15th-17th May, 1998.

[6] இந்தியத் தொல்லியல் துறை தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்களுடன் இணைந்து இது தொடர்பான முயற்சிகள் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

maanilavan@gmail.com